Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (09.03.2015) மாலை கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்க மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன், முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந்தன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ.ரமேஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் ராஜராஜன் (மஞ்சள்) இல்லம் 421 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும் இலங்கெஸ்வரன் (நீலம்) இல்லம் 397 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் எல்லாளன் (பச்சை) இல்லம் 395 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும்  சங்கிலியன் (சிவப்பு) 394 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
மாணவர்களது அணி வகுப்பு மரியாதை உடற்பயிற்சி கண்காட்சி என்பன இடம் பெற்றதோடு விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.














Post a Comment

0 Comments