Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அணிக்காக கால்காப்பு அணியாமல் கீப்பிங் செய்த தோனியின் துணிச்சல்


மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தோனி கால்காப்பு அணியாமல் சில பந்துகளை கீப்பிங் செய்து அசத்தினார்.

கிரிக்கெட் ஆட்டத்தில் இது மிகவும் அரிதான காரியமே. காரணம் கால்காப்பு அணியாமல் விக்கெட் கீப்பர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் தோனி இன்று அஸ்வினின் ஒரு ஓவரில் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.

காரணம் இல்லாமலில்லை, ஏதோ சாகசம் செய்ய அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக ஆட்டத்தின் 14-வது ஓவரில் அஸ்வின் வீசும் போது அவருக்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொள்ள நெருக்கமாக பீல்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தார் தோனி.

அது நடு ஓவர் என்பதால் அந்த நெருக்கமான பீல்டர் கால்காப்பை வரவழைக்க இயலாது. ஓவர் முடிந்தவுடனேயே கால்காப்பை வரவழைக்க முடியும்.

இந்த நிலையில் ரஹானேயை நெருக்கமாக கொண்டு வந்த தோனி, தனது விக்கெட் கீப்பிங் கால்காப்பை கழற்றி ரஹானேயிடம் அளித்தார்.

அஸ்வின் வீசிய 4 பந்துகளை அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் நின்று கால்காப்பில்லாமல் கீப் செய்து துணிச்சலை வெளிப்படுத்தினார். அதே வேளையில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கால்காப்பு காரணமாக அவர் இழக்க விரும்பவில்லை என்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.

அஸ்வின் ஒரு வேகமான பந்தை வீசி அது தோனியின் கால்காப்பு கவசம் இல்லாத காலைத் தாக்கியிருந்தால்... ஆனால் தோனி அதையெல்லாம் யோசிக்கவில்லை. 

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் செய்யத்துணியாத காரியத்தை தோனி துணிந்து செய்துள்ளார்

Post a Comment

0 Comments