Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பையர் நொட் அவுட்டுன்னாலும், 'தானாக முன்வந்து' அவுட்டான குலசேகரா!


115 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தபோது, 7வது விக்கெட்டாக களமிறங்கினார் குலசேகரா. மறுமுனையில், குமார் சங்ககாரா நீண்ட நேரமாக, போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவருக்கு கம்பெனி கொடுத்தால் மட்டும் போதும், என்றுதான் அணி கேப்டன் மேத்யூஸ், குலசேகராவுக்கு அட்வைஸ் செய்து களம் அனுப்பி வைத்தார். குலசேகரா 1 ரன் எடுத்திருந்தபோது, டுமினி வீசிய சுழற்பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் டி காக்கின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து, டுமினி, அம்பையரை நோக்கி முறையிட்டார். விக்கெட் கீப்பரும், அவுட் கேட்டார். ஆனால், அம்பையர் அசரவில்லை. அவுட் இல்லை என்று தலையை ஆட்டிவிட்டார். ஆனால், இதையெல்லாம் பார்த்த பிறகும், குலசேகராவோ, பெவிலியனை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார். இக்கட்டான நேரத்திலும், பேட்டில் பந்து பட்டதை மறைத்து விளையாட குலசேகரா விரும்பவில்லை. நேர்மையான முறையில், வெளியேறிவிட்டார். 2003 உலக கோப்பை அரையிறுதியின்போது, ஆஸ்திரேலியா-இலங்கை மோதிய போட்டியில், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் இப்படித்தான் அம்பையர் அவுட் இல்லை என்ற பிறகும் நடையை கட்டினார். அதைவிட நெருக்கடியான ஒரு சூழ்நிலையில், இன்று குலசேகரா நேர்மையை கடை பிடித்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாராட்டை பெற்றுள்ளது.


Post a Comment

0 Comments