அடிலைட்: உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. 276 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது. இதனால் வங்கதேசம் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. -
0 Comments