வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்படவுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் விடியல் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சாலை ஊழியர்களின் நான்கு மாத நிலுவை சம்பளத்தினை வழங்க நேற்றிரவு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் இன்னும் இரு வாரங்களுக்குள் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
தற்போது தொழிற்சாலை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் பேராட்டத்தினை முடிவுக்கொண்டு வருமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தங்களது கடந்த நான்கு மாதங்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments