வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக, வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை வீட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே சசிகலா ரதன் (31) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த திருமதி.சசிகலா ரதன் என்பவர் வாழைச்சேனை சனச அபிவிருத்தி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றியவர் என்றும்,இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments