Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார் விபூசிகா! - வழக்குகளும் வாபஸ்.

மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர்.
  
அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை பிணையில் எடுப்பதற்காக பாடுபட்ட சட்டத்தரணிகள், என்னை சரியான முறையில் வழிநடத்திய சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.
விபூசிகாவுக்கு தற்போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் அவரை சிறுவர் இல்லத்தில் தங்க வைத்து அதன் பின்னர் தாயாருடன் அனுப்புவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதாக, கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி எஸ்.விஜயராணி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments