Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வட பகுதிக்கு நாளை விஜயம் செய்யும் மைத்திரி, ரணில், சந்திரிகா

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். 
25 வருடங்களின் பின்னர் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பரப்பு பொதுமக்களிடத்தில் விரைவில் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தனது யாழ். விஜயத்தின் போது உறுதியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 232ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்டதுடன் வலி. வடக்கில் அச்சுவேலி வயாவிளான் பகுதியும் மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிலப்பரப்பினை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடத்தில் அவர்களின் நிலங்களை நாளையதினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments