சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கான மகளிர் தினக்கொண்டாட்டங்கள் இன்றைய தினம் இடம்பெற்றன.
சிறைச்சாலை நலன்புரி சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளிர் அமைப்பு நிறுவனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
சிறைச்சாலை நலன்புரி சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளிர் அமைப்பு நிறுவனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.ஏ.பிரியங்கர தலைமையில் நடைபெற்ற மகளிர் தினக் கொண்டாட்டங்களில், சிறைச்சாலை அதிகாரிகள், தேவைநாடும் பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் சுயதொழிலில் ஈடுபடும் வகையில் சுயதொழில் பயிற்சியும் இடம்பெற்றது. தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றும் விளக்கமறியல் கைதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
0 Comments