ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் கதாநாயகன் யார் தெரியுமா? தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ்தான். அவரது ஆட்டத்தை பார்த்து பார்த்துதான் மேக்ஸ்வெல்லும் தனது அதிரடி ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டார். இன்றைய ஆட்டத்தின் போது டி வில்லியர்சின் சாதனையை உடைத்தெறிந்து குருவை மிஞ்சிய சிஷ்யராக ஆகியிருக்கிறார் மேக்ஸ்வெல்.
.jpg)
இலங்கைக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 51 பந்துகளில் சதமடித்தார். இதுதான் இந்த உலகக் கோப்பையில் மிக விரைவாக அடிக்கப்பட்ட சதமாகும். இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் சதமடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதோடு உலகக் கோப்பையில் மிக விரைவாக சதமடித்த வீரர் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் டி வில்லியர்ஸ். தற்போது டி வில்லியர்சை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் மேக்ஸ்வெல்... அந்த வகையில் குருவை மிஞ்சிய சிஷ்யன்தான்!
0 Comments