Advertisement

Responsive Advertisement

இலங்கை போர்க்குற்ற சாட்சிகள் 60 பேர் கடந்த ஆண்டில் வெளிநாடுகளில் தஞ்சம்! - ஐ.நா அறிவிப்பு

கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் 6792 இலங்கையர்கள் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக அரசியல் புகலிடம் கோரியவர்களின் மொத்த எண்ணிக்கை 6792 எனத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 12 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரும் நேபாளத்திற்கு சென்று அங்கு காத்மண்டுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் புகலிடம் கோரியுள்ளனர். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க முன்வந்த 60 சிங்கள மற்றும் தமிழர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments