Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

15 வயது சிறுமியுடன் உல்லாசம் ; கால்பந்து வீரர் கைது!

15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது.

அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார் தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன்டர்லேன்ட்டில் பிறந்தவர் ஜான்சன். 17 வயதில் கால்பந்துப் போட்டிகளில் அறிமுகமானஆர். 2005ல் நடந்த ஐரோப்பிய கோப்பைப் போட்டித் தொடரில் அவர் அறிமுகமானார்.

லீட்ஸ், மிடில்ஸ்போரோ, மான்செஸ்டர் சிட்டி என பல அணிகளில் ஆடியுள்ளார். 2012ம் ஆண்டு சுன்டர்லேன்ட் அணிக்காக ஒப்பந்தமானார். 2014ம் ஆண்டு அவர் பிளேயர் ஆப் தி மன்த் விருது பெற்றவர். இங்கிலாந்து 19 மற்றும் 21 வயதுக்குட்பட்டோர் அணிகளில் இடம் பெற்று ஆடியுள்ளார். சீனியர் அணியில் 12 முறை பங்கேற்று ஆடியுள்ளார். கடைசியாக அவர் 2012ல் நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில் ஆடியுள்ளார்........!

Post a Comment

0 Comments