Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகரையில் ஏழுபேர் கைது

வாகரை கடலில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் பயன்படுத்தி  மீன்பிடியிடியில் ஈடுபட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் ஏ.ஏ.பரீத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாகரை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் கொண்டு மீன்பிடித்துவிட்டு பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றிவரும்போது கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

பெருமளவிலான மீன்கள் ஏற்றிவந்த வாகனம், சட்டவிரோத வலைகள், டைனமைட் உட்பட மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன இன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பபடவுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments