கேகாலை இருந்து கதுறுவளைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தே விபத்துக்குள்ளானது.
வீதியால் மிகவும் வேகமாக வந்த பேரூந்து வண்டியானது தனது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதி அதனை பிடிங்கியெடுத்து பின்னர் மரத்துடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு அந்த இடத்தில் பெரியளவிலான மரமொன்று நின்றதன் காரணமாக அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் ரீ குடிக்கச் சென்றவரது மோட்டார் சைக்கிள் அப்படியே சேதத்திற்குள்ளாகி இருக்கின்றது. மரம் இல்லாமல் இருந்திருந்தால் கடையை பதம் பார்த்து அங்கிருந்தவர்களுக்கும் சேதத்தினை ஏற்படுத்த வாய்ப்பேற்பட்டிருக்கும் என பொலிசார் கூறினார்.


0 Comments