Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு

வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சலுகைக்கமைய, பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கைக்கு அமைய பொருட்களின் விலைகளை குறைக்காத வர்த்தகர்களை கண்டறிவதற்கு நாடெங்கிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
விலைக் குறைப்பு தொடர்பான சுற்றறிக்கை நுகர்வோர் அதிகார சபையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சலுகை மக்களை சென்றடையும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எனவும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments