Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் தளபாட பற்றாக்குறை மற்றும் பூர்த்திசெய்யப்படாத கட்டிடப்பணிகளை புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின்
பூர்த்திசெய்துதருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று கல்விக்கோட்டத்துக்குட்பட்ட தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் இரண்டுமாடிக்கட்டிடத்திறப்பு விழா இன்று நண்பகல் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.மதிசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் சுமார் 65 இலட்சம் ரூபா செலவில் இந்த இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வகுப்பறைகள்,அதிபர் அலுவலகம் ஆகியன இந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள்,பெற்றோர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,
எதிர்வரும் 13ஆம் திகதி பிரதிக்கல்வி அமைச்சர் இராதா கிருஸ்ணன் மட்டக்களப்பு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பற்றாக்குறைகள் தீர்த்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்.download DSC_6048 DSC_6054 DSC_6100 IMG_0157 IMG_0176 jaffna_pro_013

Post a Comment

0 Comments