Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்பூர் பகுதியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புலிக்கொடியுடன் ஆயுதங்கள் மீட்பு -

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட சம்பூர் அம்மன் நகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக் கிழமை பகல்  பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள்  தனியார் காணியொன்றிலுள்ள நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது மிதிவெடி, புலிக்கொடி, ரீ56ரக மெக், எஸ்.ஜீ.ரவுண்டஸ், கிரனைட், கிளைமோர், டெட் நைட்டர், ஆட்லரி சாச்சர் கூர், டொம்பா ரவுண்ஸ், கிளைமோர் ரிமோட், மோட்டார்கன் பியூஸ், ரீ56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன மீட்டகப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
மூதூர் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.download

Post a Comment

0 Comments