Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகனங்களுடன் கவிழ்ந்த பாரிய கப்பல் (PHOTOS)

வாக­னங்­களை ஏற்­றிச்­சென்ற பாரிய கப்­ப­லொன்று இங்­கி­ லாந்தின் சௌதம்ப்டன் கடற்­ப­கு­தியில் நேற்­று­ முன்­தினம் கவிழ்ந்­துள்­ளது.  

ஹொயே ஒசாகா எனும் இக்­கப்பல் 180 மீற்றர் (சுமார் 590 அடி) நீள­மா­னதாகும்.
சிங்­கப்­பூரில் பதி­வு­செய்­யப்­பட்ட இக்­கப்பல் இங்­கி­லாந்தின் சௌதம்ப்­ட­னி­லி­ருந்து ஜேர்­ம­னியை நோக்கி சென்று கொண்­டி­ருந்­த­போது நேற்­று­ முன்­தினம் இரவு கவிழ்ந்­தது.  

அக்­கப்­பலில் இருந்த 25 ஊழி­யர்கள் மீட்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் காய­ம­டைந்த ஒருவர் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத் துச் செல்­லப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

பல்­வேறு வகை­யான வாக­னங்­களை ஏற்­றிச்­சென்ற இக்­கப்பல் 45 பாகையில் கவிழ்ந்­தது. 

இக்­கப்­பலை மீண்டும் நிமிர்த்தி மிதக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.


Post a Comment

0 Comments