மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகாலா மகேஸ்வரன் இன்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விவகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்
இந்த அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துண்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சேவையாற்றுவேன். இந்த பிரதியமைச்சுப் பொறுப்பை தனக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மற்றும் ஜ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அமைச்சின் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. அதற்காக கூடிய நிதியைப் பெற்று
இந்த ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது பங்களிப்புக்கும் நான் நன்றி தெரிவிப்பதோடு எனது பிரதியமைச்சர் பொறுப்பிலிருந்து அவர்களது ஆலோசனையையும் பெற்றுக்கொள்வேன்.
இந்த ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது பங்களிப்புக்கும் நான் நன்றி தெரிவிப்பதோடு எனது பிரதியமைச்சர் பொறுப்பிலிருந்து அவர்களது ஆலோசனையையும் பெற்றுக்கொள்வேன்.
குறிப்பாக வடக்கில் வாழ்ந்த மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்காக கூடுதலான நிதி மற்றும் ஏனைய அமைச்சர்களின் உதவியையும் பெற்றுக்கொள்வேன்.
கடந்த யுத்த காலத்தில் பலஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரனையுமின்றி சிறையில் வாடுகின்றனர். இவர்களது தாய் தந்தையர்கள், மனைவி பிள்ளைகள் மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களை உரிய விசாரனைகளை மேற்கொண்டு விடுதலை செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள்.
அதற்காக ஜனாதிபதி பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஜனாதிபதியின் வெற்றிக்கு குறிப்பாக ஜ.தே.கட்சி மற்றும் சிறுபான்மைச் சமுகங்களை இந்த ஜனாதிபதிக்கு வாக்களித்திருந்தனர்.
0 Comments