Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவி – பிரதமரும், ஜனாதிபதியும் ஏற்பு

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஜனாதிபதியையும், பிரதமரையும் தனித்தனியே சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது.
இதன் போது, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்பதற்கான யதார்த்தத்தை தாம் தெளிவுப்படுத்தியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில், தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே தனித்த 11 பேர் என்ற அதிக உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டிருக்கிறது.
இதற்கு அப்பால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 உறுப்பினர்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி நான்கு உறுப்பினர்களையும் முன்னாள் மத்திய அமைச்சர் விமல் வீரவன்சவின ;தேசிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினரையும் கொண்டிருக்கிறது.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூவர் அதில் இருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விலகி இருந்தனர்.
இதனைத் தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை தனித்து நோக்கும் போது, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஒன்பது உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லாவின் கட்சிக்கு மூன்று உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ஒருவரும், அங்கம் பெற்றுள்ளனர்

Post a Comment

0 Comments