சம்மாந்துறை, மாகண்டு வீதி பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தன் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியாகும்.
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரனையை மேற்கொள்கின்றனர்.
0 Comments