Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாவாந்துறையில் ஊரடங்குச்சட்டம்! – கண்டதும் சுட பொலிசார் படையினருக்கு உத்தரவு.

யாழ்.நாவாந்துறை பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் மீண்டும் மோதல் தீவிரம் பெற்றதையடுத்து, நேற்றுமாலை தற்காலிக ஊரடங்குச்சட்டம் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டது. மென்பான நிறுவனம் ஒன்று நடத்திய உதைபந்தாட்டப் போட்டியையடுத்து நாவாந்துறை பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக் கிடையில் மோதல் உருவானது. பின்னர் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சியினால் சற்றே மோதல் தணிந்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம், மீண்டும் மோதல் மூண்ட நிலையில் இரு பகுதியினரும் போத்தல்கள், கற்களை கொண்டு ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியினை நேற்றுமுன்தினம் நள்ளிரவு படையினர் சுற்றிவளைத்திருந்தனர். இதன்போது கடலில் மீன்பிடிப்பதற்குப் பாவிக்கும் டைனமைற் வெடிபொருளை, மீனவர்கள் சிலர் மோதலில் பயன்படுத்தி வெடிக்க வைத்திருக்கின்றனர். இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட பகுதியினர் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த பகுதியில் தற்காலிக ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளதுடன், அப்பகுதியில் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அல்லது வெடிபொருட்களை வைத்து தாக்குதல் மேற்கொள்பவர்கள் மீது கண்டதும் சுடும் உத்தரவு தமக்கும், படையினருக்கும் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments