கடந்த ஜனாதிபதி தேர்தலின் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் அக்கரைப் பற்றிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்ப்பதால் இந்த சந்தற்பத்தினை பயன்படுத்தி அக்கரைப் பற்றில் இன்னுமொரு கட்சியை உருவாக்க சிலர் முயன்று கொண்டிருப்பதையும், கறுப்பு சுவரொட்டிகள் அங்காங்கே பரவலாக ஓட்டப்படுவத்தையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
நாங்கள் இஸ்லாமிய இலாப ஆட்சிக்கொப்பான நீதியானதும் நேர்மையானதுமான ஆட்சியை அமைக்கப்போகின்றோம் எங்கள் பக்கம் எல்லோரும் அணிதிரளுங்கள் என அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள், ஆனால் நீதியானதும், நேர்மையானதுமான ஆட்சி உமர் (ரலி) காலத்தோடு முடிந்து விடும் அதன் பின்னர் அப்படியான ஒரு ஆட்சி இந்த உலகில் ஏற்படாது என்ற நபி மொழியை மறந்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் .
இவர்களின் தோற்றமானது அக்கரைப்பற்றின் ஒற்றுமையை சீர்குலைத்து அக்கரைப்பற்றின் வாக்குப் பலத்தை துண்டாடி எதிர்காலங்களில் அக்கரைப்பற்றை அரசியல் அநாதையாக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. ஒரு சிலர் தங்களது அரசியல் ஆசையை நிறைவேற்றுவதட்காய், அதிகாரங்களில் அமர்வதற்காய் இளைஞ்சர்களை பயன்படுத்தும் ஒரு சுய நல போக்காகவே இது கருதப்படுகின்றது. இவர்களின் செயற்பாடுகளை அடியோடு அளித்து முற்றுப் புள்ளி வைக்கவேண்டியர்களாக அக்கரைப்பற்று மக்கள் கடமைப் பட்டுள்ளார்கள் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல் படவேண்டும்.
இது பற்றி தேசியகாங்கிரஸ் தலைமையோ அல்லது சின்னதம்பி தவமோ பகிரங்க எதிர்ப்புத் தெரிவிக்காவிட்ட்டாலும் அக்கரைப்பற்று மக்கள் சிந்திக்கவேண்டும். கடந்த காலங்களில் சிறைச்சாலை மலசலகூடமாய் பராமரிப்பற்றுக் கிடந்த அக்கரைப்பற்றை மக்களாகிய நாங்கள் ஒற்றுமைபட்டு தேசிய காங்கிரசுக்கு அளித்த ஆணைகளினால் தற்போது எங்கள் ஊர் மாநகரமாக திகழ்கின்றது, எங்களது அடிப்படை வசதிகள் ஓரளாவது நிறைவேறப் பட்டுள்ளது, கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாங்கள் மற்றய ஊர்களை விடவும் முன்னேட்டமாக இருக்கின்றோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது, இது எதனால் ஏற்பட்டது யாரால் ஏற்பட்டது எங்களின் ஒற்றுமையால் ஏற்பட்டது எனவே எங்களின் ஒற்றுமையை சில குழப்பவாதிகலும், சுயநலவாதிகளாலும்,தனிப்பட்ட ரீதியாக எங்கள் தலைமையோடு இருக்கின்ற சின்ன சின்ன கோபத்தாலும் சீர்குலைத்து விடக்கூடாது.
கடந்த தேர்தலின் ஆட்சிமாற்றத்தால் தேசிய காங்கிரஸ் எதிர் கட்சியில் அமரவேண்டி ஏற்பட்டதனால் பிற ஊர் மக்களும், எங்களது ஊரின் சில முனாபிகுகளும் அக்கரைப்பற்றின் கதை முடிந்து விட்டது என சந்தோசப் பட்டுக்கொண்டிருகிறார்கள் அவர்களின் பொறமை தனத்தை ஊடகங்கள் மூலமும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்னும் எங்கள் தலைவர் பாராளுமன்றத்தில் எதிர் கதிரையில் இருந்தும் கூட அவர்கள் இப்படிகூறி ஏவம் கேட்டால் பாராளுமன்றத்தில் இல்லாமல் இருந்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.
எந்த அபிவிருத்தியும் செய்யாத ஹனிபா மதனிக்கு மூவாயிரம் வாக்குகளை அளித்த எமது ஊர் அதாஉல்லா செய்திருக்கும் சேவைகளுக்கு எத்தனை ஆயிரம் வாக்குகள் அளிக்கவேண்டும் என்பதை நீங்கள் விவாதிக்காமல் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்.
0 Comments