Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நடுரோட்டில் செருப்படி வாங்கிய டோனி

மத்தியபிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை நடுரோட்டில் வைத்து பெண்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் செந்த்வா பகுதியை சேர்ந்த வாலிபர் விராட் டோனி(வயது 23).



இவர் அப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


இதை பலமுறை கண்டித்தும் டோனி கேட்கவில்லை, எனவே அப்பகுதியை சேர்ந்த பெண் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் மோனிகா சிங்கிடம் புகார் கொடுத்தனர்.

உடனடியாக டோனியை பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி மோனிகா சிங், பொது இடத்தில் வைத்து மற்ற பெண்களை விட்டு தர்மஅடி கொடுக்க வைத்தார், புகார் தெரிவித்த பெண்களை வைத்தும் முதுகில் அடிக்க வைத்தார்.

தொடர்ந்து டோனியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர், அங்கு நீதிபதியிடம், என்னை அந்த பெண்கள் அடித்த போது, மிகவும் அவமானமாக இருந்தது.

அவர்கள் மீது என்னுடைய விரல்கூட படவில்லை. யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பதை முடிவுசெய்வது பெண் பொலிஸ் அதிகாரியின் வேலையில்லை என தெரிவித்தார்.

ஆனால் நீதிபதி அவருடைய குற்றச்சாட்டை ஏற்க மறுத்ததுடன், பள்ளி மாணவிகளை துன்புறுத்திய டோனிக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே என தீர்ப்பளித்தார்.

Post a Comment

0 Comments