Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு காத்தான்குடியில் பதட்டம்!

காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில் பொறியியலாளர் சிப்லி பாரூக் தலைமையில், ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தை, ஆரம்பத்தலிருந்தே பல வழிகளிலும் தடுத்து நிறுத்த ஆளும் தரப்பினர் அதிகப்பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் கூட்டம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. எதிர்பாராதவிதமான பொதுமக்கள் இக்கூட்டத்தைக் காண வருகை தந்திருந்தனர்.
இதன் பின்னர் அஸாட்சாலி தனது உரையில்,
ஆளும் அரசாங்கத்தின் பலவீனங்கள், எதிர்காலத் திட்டங்கள், ஊழல்கள் பற்றி பல இரகசியங்களை விலாவாரியாக எடுத்துரைத்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வைப் பற்றியும் சில வார்த்தைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் தேர்தல் காரியாலயம் உடைக்கப்படும் தகவல் தேர்தல் பிரச்சார மேடைக்கு வந்துகொண்டிருந்தன.

“இது நாங்கள் எதிர்பார்த்ததே, உடைக்கட்டும்” என்று தனது உரையைத் தொடர்ந்தார் அஸாத் சாலி.
குறித்த தேர்தல் காரியாலயம் உடைக்கப்பட்டதையடுத்து, இரவு நேரத்தில் திரண்ட பொதுமக்கள், உடைக்கப்பட்ட தேர்தல் காரியாலயத்தைச் சூந்துகொண்டதுடன், பிரதானவீதியில் குழுமியிருந்தனர்.

மக்களின் வருகையாளும், தொடர்ந்து பிரதான வீதியில் பொதுமக்கள் நிலைகொண்டிருந்ததாலும் ஆளும் தரப்பு உள்ளுர் பிரமுகர்களுக்கு அழுத்தம் ஏற்றபட்டது. இதனைத் தொடர்ந்து பிரதான வீதியின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது ஓர் பதட்ட சூழல் காத்தான்குடியில் காணப்படுகிறது. பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் தேர்தல் காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டதிலிருந்து இக்காரியாலயம் உடைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
mjspulamjspula-01

Post a Comment

0 Comments