எதிர்வரும் இரு தினங்களுக்குள் ஆளும் கட்சியில் உள்ள மிக முக்கிய புள்ளி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார் என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சருமான நந்தமித்ர ஏக்கநாயக்க அவர்கள் இன்று தெரிவித்தார். இன்று மாத்தளை மல்வத்த வீதியில் உள்ள அவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்தார்.
அரசின் மோசமான நடவடிக்கைளுக்கு கீழ்தான் நாம் இருந்து வந்தோம். அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கூறுவார்கள். ஆனால் அபிவிருத்தி பெயரில் பணத்தை கொள்ளையடித்தார்கள். நான் உயர் கல்வி பிரதியமைச்சராக இருந்தவன். அரசு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் எதனையும் தீர்க்க முன்வரவில்லை.
நடைபெறும் அநியாயங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாத நிலையில் தான் நான் நாட்டுக்காக இந்த முடிவை எடுத்தேன்.

0 Comments