அனைத்து தேசிய பாடசாலைகளும் காலை 7.30 முதல் மதியம் 1.30 வரையே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
நாட்டின் அனைத்து பகுதிகளினதும் காலநிலை மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் சங்கடங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளளார். ஹோமாகம மஹிந்த ராஜபக்ச வித்தியாலயம் மதியம் 3.30 வரை இயங்கி வருகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இது தேசிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவிப்பு என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments