Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பதவி இல்லையாம் கணவன் எதற்கு! மகிந்தவின் மனைவி

பெண்களின் குணத்தை தானும் காட்டியுள்ளார் மகிந்தவின் மனைவியான ஷிரந்தி. கணவனுக்கு பதவி இல்லாது போனவுடன் கணவன் கசக்கத் தொடங்கிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷ தனது கணவருடன் முரன்பட்டதாகத் தெரியவருகின்றது.
தற்போதைய நிலையில் கொழும்பு அருகேயுள்ள ஒரு மாளிகையில் தனது மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுடன் ஷிரந்தி தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் ஷிரந்தியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே புனித பாப்பரசரின் வருகையின் போது அவரைச் சந்திக்கும் சாக்கில் ஷிரந்தியுடன் சமாதானமாகும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கத்தோலிக்க மதத்தவரான தனது மனைவி தன்னுடன் இணைந்து பாப்பரசரை சந்திக்க வரக் கூடும் என்று எதிர்பார்த்த மஹிந்தவுக்கு கடைசியில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது.சிராந்தி பாப்பரசரை சந்திக்க மட்டும் மகிந்தருடன் இருந்துவிட்டு அப்புறம் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசாங்க விடயங்களில் முக்கியத்துவம் வழங்கியமை காரணமாகவே மஹிந்த தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பதுதான் ஷிரந்தியின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
2005ம் ஆண்டின் ஆரம்பம் தொட்டே கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments