மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைப்பிரதேசத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முனைப்பு நிறுவனம் சுயதொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் முதற்கட்டமாக பட்டிப்பளைபிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்கு அண்மையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் வைத்து சுயதொழிலுக்கான பொருட்கள் முனைப்பு நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஆடு வளர்ப்புக்குத்தேவையான ஆடுகள்,மா அரைப்பதற்பான இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெறப்படும் வருமானத்தின் ஊடாக தங்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டினை முன்னெடுக்க முடியும் என பயனாளிகள் கருத்து தெரிவித்ததுடன்,இவ்உதவியை நல்ல முறையில் பயன் படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தாங்கள் செயற்படவுள்ளதாகவும் இவ்உதவிகளை வழங்கிய சுவிஸ் முனைப்பு அமைப்பினருக்கும் தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
பட்டிப்பளைப்பிரதேசம் கடந்தகால யுத்த நடவடிக்கையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments