Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ள நீரில் மூழ்கும் சித்தாண்டி –பெருமளவான மக்கள் பாடசாலைகளில் தஞ்சம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதி நீரில் மூழ்கிவருவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.


இன்று மாலைக்கு பின்னர் பிரதான வீதியூடாக நீர் பெருமளவில் பாய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சித்தாண்டி மற்றும் சந்திவெளி ஆகிய பிரதேச மக்கள் பெருமளவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக சித்தாண்டியின் பல பகுதி நீரில் மூழ்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று இரவுக்கு பின்னர் அநேகமானோரின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தற்போது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சித்தாண்டி பகுதியில் இரண்டு அடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.



தற்போதும் பெரும் மழை பெய்துகொண்டிருப்பதனால் இப்பகுதியினால் நாளை போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையும் உருவாகலாம் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.








Post a Comment

0 Comments