Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னைக்குடாக் கடலில் காணாமற்போன மீனவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னைக்குடாக் கடலில் கடந்த வியாழக்கிழமை(18) காலை காணாமற் போன மீனவரின்; சடலம் இன்று சனிக்கிழமை(20) காலை புன்னைக்குடாக் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தோணியில் சென்று கரைவலை போட்டுக் கொண்டிருந்த போது பாரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு இவர் காணாமற் போயிருந்தார்.
ஏறாவூர் ஐயங்கேணி பாடசாலை வீதியைச் சேர்ந்த கந்தசாமி பிரிதரன் (வயது 20) என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரை தேடும் முயற்சிகள் தொடர்ந்தன. எனினும் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை. இதேவேளை, இன்று அந்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசார
ணைகளில் ஈடுபட்டுள்ளனர்


Post a Comment

0 Comments