எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்;டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்பிராச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு பிரதான உரையினை நிகழ்த்தினார்;.
இப்பிராச்சார கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.ரஹ்மான், கல்முனை முகைதீன் ஜம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிடட பெருந்திராள மக்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா கடற்கரைப் பள்ளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளிலும், துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்.
இதேசமயம் கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
0 Comments