கோலியும், ரஹானேவும் 4-வது விக்கெட்டுக்கு 262 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளனர். நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க மெல்போர்ன் மைதானத்தில் வெளிநாட்டு ஜோடி ஒன்று ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்ப்பது கடந்த 90 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1925-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ்-ஹெர்பர்ட் சுட்கிளிப் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.
*விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 11 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 1029 ரன்கள் சேர்த்துள்ளார். அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த 10-வது இந்தியர் ஆவார்.
*மெல்போர்ன் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இரு அணியும் 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 2-வது முறையாகும். மற்றொரு நிகழ்வு 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்டின் போது நடந்தது.
*இந்த தொடரில் ஏற்கனவே அடிலெய்டு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (115, 141 ரன்) சதம் அடித்திருந்த விராட் கோலி இப்போது 3-வது முறையாக சதம் கண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 3 சதம் விளாசிய 2-வது இந்தியர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1977-ம் ஆண்டு தொடரின் போது சுனில் கவாஸ்கர் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.
*உள்ளூரோ வெளிநாடோ 4-வது வரிசையில் இறங்கி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே தொடரில் 3 சதங்கள் அடித்தவர் விராட் கோலி மட்டுமே.
*ஆசிய கண்டத்திற்கு வெளியே விராட் கோலி 6 சதங்களை ருசித்துள்ளார். இந்த வகையில் அவர் சச்சின் தெண்டுல்கர் (18 சதம்), கவாஸ்கர் (15), ராகுல் டிராவிட் (14), வி.வி.எஸ்.லட்சுமண் (8) ஆகியோருக்கு அடுத்த இந்தியராக இருக்கிறார்.
0 Comments