இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஊடகங்களுக்கு உத்தியோகபுர்வமாக வெளியிடும் பொறுப்பை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை இதுவரையில் உத்தியோகபுர்வமாக வெளியிட்டு வந்த அரசாங்க தகவல் திணைக்களம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அந்த வாய்ப்பை இழந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளருக்குக் கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று கூறியுள்ளது.
0 Comments