Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 7, 8, 9 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்தாலும், பாடசாலைகளில் அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும் தினத்தில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் அரச பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்


ஜனவரி மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதோடு, ஜனாதிபதி தேர்தலுக்காக 7 ஆம், 8, 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments