மட்டக்களப்பு தேசிய பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் பொன்.வன்னியசிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலையின் ஆரம்ப பிரிவு பாண் வாத்தியக் குழுவினரால் வரவேற்கப்பட்டார்கள். பின்னர் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கிக் கொளரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர். இம்முறை வித்தியாசமான முறையில் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் என்போர் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக தமிழ் மொழிவாழ்த்து, நன்றுயுரையுடன் நிகழ்வு முடிவடைந்தது. மாணவர்களின் பெற்றோர்களால் மதிய போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சித்தியடைந்த மாணவர்களுக்கான கிண்ணங்களை பாடசாலையின் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















0 Comments