Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காரைதீவு முச்சந்தியில் 12 அடி உயரமுள்ள விபுலாநந்தரின் திருவுருவச்சிலை


முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் முச்சந்தியில் வைப்பதற்கு 12 அடி உயரமுள்ள காரைதீவின் முகவரியாக திகழ்கின்ற விபுலனின் உருவச்சிலை சம்பிரதாய முறைப்படி அவர் பிறந்த மண்ணுக்கு சற்று முன் கொண்டு வரப்பட்டு விபுலாநந்த சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்லாறில் இருந்து கனரக வாகன உதவியுடன் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு வந்தடைந்து பூசை நிகழ்வுகளின் பின்னர் பொது மக்கள் பார்வையில் முச்சந்தியில் காரைதீவு-அம்பாறை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் வைப்பதற்கு காரைதீவு இந்து சமய விருத்தி சங்கம், புஸ்பா சமூக பொருளாதார அமைப்பு, அறங்காவலர் ஒன்றியம் ஆகியன இணைந்து அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் பூரண வழிகாட்டலிலும் ஒத்துழைப்புடனும் துரிதமாக மிக்குறுகிய காலப்பகுதியில் விபுலனுக்கு சிலை வைக்கப்ட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்று நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்புக்களையும் உதவிகளையும் புரிந்தனர்.

                                      Photo 

Photo

Photo

Photo

Photo




Post a Comment

0 Comments