Home » » முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுகிறது..!! கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம்

முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுகிறது..!! கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது.
முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்களையும், அழுத்தங்களையும் கொடுத்த பொதுபல சேனா அமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை.
பொதுபல சேனா ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரி வருகின்றனர்.
முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பொதுபல சேனா ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது துரோகச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்றிரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் விசேட கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற்றுக்கொண்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தையும் அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸின் ஆதரவு கலைகிறது. கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதிவரை கிழக்கு மாகாணசபையின் 2015 வரவு செலவுத் திட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்போது அந்த வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால், கிழக்கு மாகாணசபையை கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களான அமீர் அலி, ஷில்பி பாரூக் மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கி தனித்து செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸ்சுக்கு 7 உறுப்பினர்களும் மூன்று சுயாதீன உறுப்பினர்களும் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 11 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் 2 போனஸ் உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாக இருந்தால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் இணைந்த ஆட்சி ஒன்றுக்கு வழியேற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |