Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஐந்தில் ஒரு பங்கு பரப்பளவு நிலத்தில் புதையும் ஆபத்து!

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் 12122 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இவ்வாறு மண்சரிவு மற்றும் மண்ணுள் புதையுண்டு போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
  
இயற்கை காரணிகள் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் தனது எச்சரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments