மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் கீழ் கட்சியின் அலுவலகம் மாவட்ட ரீதியாக திறக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான அலுவலகம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் ஜனாதிபதியின் மட்டக்களப்பு இணைப்பாளருமான அருண் தம்பிமுத்துவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம்,ஏறாவூர் நகரசபையின் முதல்வரும் இரட்டைத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான அலிசாகிர் மௌலானா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள்,பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கியதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளவர்களுக்கான கட்சி அங்கத்துவ பத்திரமும் வழங்கிவைக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையிலும் மக்கள் தமக்குரிய சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு நகரில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments