Advertisement

Responsive Advertisement

மட்/வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை தேசிய ரீதியில் கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளது


தேசிய ரீதியில் கிழக்கு மாகாணத்தின் பெருமையினையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமையினையும் கொண்டு சென்ற பெருமை மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலைக்கு உள்ளதாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் கே.மனோகரன் தெரிவித்தார்.

194ஆண்டு நிறைவினை கொண்டாடிக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான தமிழ் கல்விப்பணிப்பாளர் முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் கே.மனோகரன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கோட்டக்கல்வி அதிகாரி சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள், க.பொ.த.சாதரண பரீட்சை ஆகியவற்றில் சிறப்பு சித்திகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாட ரீதியாகவும் பாடசாலையில் சிறந்த செயற்பாடுகளைக்கொண்ட மாணவிகளும் இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பெருமளவான பழைய மாணவர்களும் பெற்றோரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
































Post a Comment

0 Comments