Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மதிலுடன் மோதியது மோட்டார் சைக்கிள் - மாணவன் பலி

வட்டுக்கோட்டை, மாவடிப் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் அந்த இடத்திலேயே மரணமானார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் எஸ்.சுபராஜ் (வயது16) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். அராலி - தெல்லிப்பழை பிரதான வீதியூடாக குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த மதிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த மாணவன் தலைக்கவசத்தை அணியாது கையில் கொண்டு சென்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
   

Post a Comment

0 Comments