மட்டக்களப்பு வலய விஞ்ஞான வினாடி வினாப்போட்டியில் பங்கு பற்றி கோட்ட மட்டத்திலும் , வலய மட்டத்திலும்வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட். சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் க. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றபோது இந்நிகழ்வின் போது காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து தற்போது மட்.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில்கடமையாற்றும் . ச.ரவீந்திரன் விஞ்ஞான ஆசிரியரினால் ‘கல்சியம் காபனேற்றை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள்‘ எனும் தலைப்புக் கொண்ட இறுவட்டு மாணவர்களின் சுயமான கணிணியூடான கற்றல்சாதனம் வெளியிட்டு வைக்கப்பட்டது
.பிரதமஅதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக இரசாயனவியல்விரிவுரையாளர்கலாநிதி மா . கோணேஸ்வரன்;கௌரவ அதிதியாக மண்முனை வடக்குஉதவி.பிரதேச.செயலாளர்சோ .யோகராஜா விஞ்ஞான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பா. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிதனர்.ஆசிரியர் ரவீந்திரன் இறுவெட்டை அதிதிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றுவதைப்படங்களில் காணலாம்.
படங்கள்
வி.ரி.சகாதேவராஜா
0 Comments