Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண குறு நாடகப் போட்டி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும் மாகாண குறு நாடகப் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
இப் போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கழகங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
இப் போட்டிகளில் சிறந்த நாடகம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த நெறியாளர், சிறந்த மேடையமைப்பு, சிறந்த ஒப்பனை எனப் பல்வேறு கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
பிரதேச செயலக ரீதியாக நடத்தப்பட்ட குறு நாடகப் போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்களே இப் போட்டிகளில் பங்கு பெறுகின்றன.
இப் போட்டிகளுக்கான விருது வழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாகவும் மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முனைக்காடு நாகசக்தி கலைமன்றம், வாகரை நியூ ஆர்ட்ச்ஸ் கிளப், செங்கலடி நாக ஜோதி கலாமன்றம், களுவன்கேணி தேனக கலை மன்றம், வவுணதீவ மலைமகள் கலைமன்றம், ஆரையம்பதி ஆரையூர் கலாமன்றம், வாழைச்சேனை அண்ணா கலை மன்றம், தேத்தாத் தீவு தேனுஜா கலை மன்றம் ஆகிய 8 மன்றங்கள் கலந்து கொள்கின்றன.
சிறந்த நவீன நாடகங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இச் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments