Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் இணைந்து நடத்தும் படகுச் சேவை


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற கடும் மழை காரணமாக கிரான்புல் ஆற்றுநீர் உயர்வடைந்ததைத் தொடர்ந்து, கிரான் பாலம் ஊடான தரைவழிப் போக்குவரத்து இரண்டு நாட்களாக தடைப்பட்டுள்ளது.

கிரான் தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பேருளாவெளி, கோராவெளி, புலாக்காடு, முறுத்தாணை, குலாவாடி போன்ற கிராம  அலுவலகர்  பிரிவுகளில் வசிக்கும் மக்களின் தரைவழி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

இந்தப் பாலத்தின் மேலாக வெள்ளநீர் செல்கின்றமையால், படகுச் சேவையை  ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (23)  கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் நடத்துகின்றனர். 

இதேவேளை, சந்தனமடு ஆற்று நீர்மட்டம் உயர்வடைந்தமையால், சித்தாண்டியை அண்மித்த வயல்வெளி பிரதேசத்தில்; முற்றாக வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது

Post a Comment

0 Comments