Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்தின் பத்தாவது வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  அரசாங்கத்தின் பத்தாவது வரவு செலவுத்திட்டம்   பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் 152 ஆதரவுடன் மேற்படி பத்தாவதும் 2015 ஆம் நிதி ஆண்டுக்கானதுமான வரவு செலவுத்திட்டத்திற்கு 95 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 
மேலும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 57 வாக்குகள் அளிக்கப்பட்டன.

2015 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப்  பிரேரணைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, ஈ.பி.டி.பி., மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தேசியக்கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

Post a Comment

0 Comments