களுவன்கேணி கடலில் இன்று 13 (வியாழக்கிழமை) கே.கணபதி என்பவருக்குச் சொந்தமான இழுவை வலையில் சிக்கிய சுமார் இருபது இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் பிடிபட்டன.
இழுவை வலையில் சிக்கிய மீன்களை பெரும் சிரமத்தின் மத்தியில் மீனவர்கள் கரைசேர்த்ததுடன் பிடிபட்ட மீன்களை மொத்த மீன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்தனர்.
பெருமளவிலான பாரை மீன்கள் பிடிபட்டதை அறிந்த பொதுமக்களும் பார்வையிடுவதற்காக கடலுக்கு வருகை தந்திருந்தனர்.
0 Comments