அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு வயது சிறுவன் நிலத்தடி கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சொறிக்கல்முனை - 1, கிராமசேவகர் பிரிவினை சேர்ந்த ரவி அனுசாந்த்(04வயது)என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் காணாத நிலையில் சிறுவனை தேடிவந்துள்ளனர்.இந்த நிலையில் கிணரினை பார்த்தபோது குறித்த சிறுவன் அதனுள் கிடந்துள்ளான்.
உடனடியான அயலவர்கள் குறித்த சிறுவனை மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள கிணறினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments