Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரி ஒரு நேர்மையான அரசியல் வாதி: - ஹிருணிக்கா புகழாரம்!

மைத்திரி ஒரு நேர்மையான அரசியல் வாதி – ஹிருணிக்கா எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தூய்மையும் நேர்மையும் கொண்ட அரசியல் வாதி என ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவும், ராஜித சேனாரத்னவும் தனது தந்தையின் மரணத்தின் போதும் மரணத்தின் பின்னரும் தனது தந்தைக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர்கள், அவர்கள் இருவரும் கட்சியை விட்டு சென்று விட்டனர்.
அவர்கள் மீண்டும் திரும்பி வரமாட்டார்கள் என்பதால், கட்சியில் இருக்கும் ஏனைய நபர்களை பாதுகாக்க கட்சி முன்வரவேண்டும் வேண்டும் இது எமக்கு பாடத்தை கற்றுக்கொடுகின்ற காலம். உண்மையான, தூய்மையான அரசியல் வாதிகள் கட்சியை விட்டு சென்றால் கட்சியில் ஹெரோயின்கார்கள், எத்தனோல்காரர்கள், கொள்ளைக்காரர்கள், வியாபாரிகள் மாத்திரமே எஞ்சியிருப்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments