Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

29 வயது பெண்ணை மணந்த 67 வயது அமைச்சர் தாத்தா..

வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக்(67). அவருக்கும் கொமிலா மாவட்டத்தில் உள்ள சந்தினா பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லா முன்ஷியின் மகள் ஹொனுபா அக்தர் ரிக்தாவுக்கும்(29) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

அதன்படி அவர்களின் திருமணம் கொமில்லா மாவட்டத்தில் உள்ள மீர்கோலா கிராமத்தில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. திருமண விழாவில் அமைச்சர் பக்கத்தில் இருந்து மட்டும் 700 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்களின் திருமண வரவேற்பு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. ஹக்கின் மூத்த சகோதரர்களான அப்துல் ராஷித், அப்துல் மதின், அப்துல் லத்தீப் ஆகியோர் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். 

1947ம் ஆண்டு பிறந்த ஹக் சட்டம் படித்தார். அரசியலுக்கு வந்த அவர் 3 முறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஹக்கின் திருமணத்தையொட்டி டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது....!

29 வயது பெண்ணை மணந்த 67 வயது அமைச்சர் தாத்தா..

Post a Comment

0 Comments